ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111வது படத்தை கோபிசந்த் மல்லேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரிந்தி சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது முதலில் வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகுவதாக அறிவித்தனர். அதன் பின்னர் அதிக பொருட்செலவால் இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்திருந்தனர். ஆனால், நயன்தாராவின் அதிக சம்பளத்தால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக இப்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் இணைந்து 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.