மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா தனது 111வது படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை விரிந்தி சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது முதலில் வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக் ஷன் படமாக உருவாகுவதாக அறிவித்தனர். அதன்பின்னர் அதிக பொருட்செலவால் இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்துள்ளனர். இதையடுத்து இப்போது இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் இணைந்து பகவந்த் கேசரி படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.