Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா

11 ஏப், 2026 - 03:03 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-to-act-in-a-story-written-for-Rajinikanth
Advertisement

அகாண்டா 2 படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது நடிகர் பாலகிருஷ்ணா, கோவிந்த் மாலினேனி டைரக்ஷனில் தனது 116 வது படத்தில் நடித்து வருகிறார். இடையில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார் என்று பின்னர் செய்தி வெளியானது. ஆனாலும் ரஜினி படத்தில் தான் நடிக்கவில்லையே தவிர ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் தான் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறாராம் பாலகிருஷ்ணா. ஆம் தெலுங்கில் நானி நடித்த அண்டே சுந்தராணிக்கி மற்றும் சரிபோத சனிவாரம் ஆகிய படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா அடுத்ததாக பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம்.

மும்பையை கதைக்களமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இது உருவாகிறதாம். ஆச்சரியமாக கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தபோது அவருக்கு இந்த கதை சொல்லப்பட்டது என்றும் ஆனால் தற்போது தான் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்திருப்பதால் உடனடியாக அப்படி இன்னொரு படத்தில் நடிக்க தான் விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டாராம். பிறகு தான் இந்த கதை ஒரு வழியாக பாலகிருஷ்ணாவை தேடி வந்திருக்கிறது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் ... 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap