சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
கேரளத்தை சேர்ந்த விஜயன் 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரெயில் படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். தனித்துவமான உடல்மொழி, குரல்வளம், அலட்டிக் கொள்ளாத நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ள கொண்டார். அவர் நடித்த 'நிறம் மாறாத பூக்கள்' படம் இன்றைக்கும் காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது. 'உதிரிப்பூக்கள்' படத்தில் அவர் நடித்த வில்லன் கேரக்டர் தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருந்தது. விஜயனை மட்டும் வைத்து 50 படங்களை இயக்க முடியும் என்று பாரதிராஜா சொல்வார்.
பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, வசந்த அழைப்புகள், மண்வாசனை, கூலிக்காரன், நாயகன், பாலைவன ரோஜாக்கள், ரமணா, 7/ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் இப்போதும் அவர் நடிப்பு பேசப்படுகிறது. இப்படிப்பட்ட மகா கலைஞனை மது வீழ்த்தியதுதான் சோகம்.
திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது அன்றைக்கிருந்த முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கினார். ஆனால் மதுபழக்கம் அவரை வீழ்த்தியது. இருந்தும் அவரது திறமையை மதித்து முருகதாஸ், செல்வராகவன் போன்றவர்கள் அவரை மீட்டு கொண்டுவர வாய்ப்பு கொடுத்தார்கள். அதனாலும் பலனில்லாமல் போனது பட வாய்ப்புகள் சுத்தமாக நின்றுபோனது. கடைசி காலக்கட்டத்தில் ஏழ்மை நிலையில் சென்னையில் ஒரு மிகச் சாதாரண லாட்ஜில் அவர் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 63. விஜயன் இன்று உயிரோடு இருந்தால் அவருக்கு வயது 80. ஆம் இன்று அவரின் பிறந்தநாள்.