நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் என இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆர்யா, சந்தானம் இருவரும் பங்கேற்றனர். சந்தானம் கூறியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நாங்கள்(ஆர்யா, சந்தானம்) இருவரும் இணைந்து அடுத்து கதாநாயகர்களாக நடிக்கவுள்ளனர். அது ஒரு அட்வென்ச்சர் படம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு அந்த படம் உருவாகும்'' என்றார். சந்தானம் போன்று ஆர்யாவும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.
டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.