Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்!

10 டிச, 2023 - 05:34 IST
எழுத்தின் அளவு:
The-shooting-of-Thupparivalan-2-will-start-in-April-next-year!

கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்கள். இங்கிலாந்தில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் விஷால். என்றாலும் அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு பிறகு துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக விஷால் கூறிய நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடித்து வரும் ரத்னம் படத்தை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் விஷால், துப்பறிவாளன்-2வுக்கு பிறகுதான் புதிய படத்தில் கமிட்டாவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி!கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ... 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)