மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என திரையுலகிலும் வெளியிலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இத்தனை வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து நீடித்து வருவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஆனால், தனி கதாநாயகியாக நயன்தாராவால் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தர முடியவில்லை என்பதும் உண்மை.
“நீ எங்கே என் அன்பே, மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, கனெக்ட், அன்னபூரணி” ஆகிய படங்களில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இதில் 'கோலமாவு கோகிலா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
சரியான கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் அவரால் தனித்து வெற்றி பெற முடியவில்லை. 'பிகில்' படத்திற்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடித்த 'தர்பார், அண்ணாத்த' மற்றும் இந்த வருடம் வெளிவந்த 'இறைவன்' ஆகிய படங்கள் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தது. இடையில் 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாராக ஓடியது. அதே சமயம் அவர் ஹிந்தியில் அறிமுகமான 'ஜவான்' படம் ஆயிரம் கோடி வசூல் படமாக அமைந்தது.
கதையிலும், கதாபாத்திரங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த தொடர் தோல்விகளிலிருந்து அவர் தப்பிக்க முடியும்.