தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே .சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் தீபாவளி விருந்தாக இன்றைய தினம் வெளியானது. இந்த நிலையில் நேற்று இப்படத்தை பார்த்து விட்ட நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளத்தில் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அதில், ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு. அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்துவது எஸ்.ஜே.சூர்யாவிற்கு வழக்கம் ஆகிவிட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை இப்படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடங்கள் இந்த படம் உங்கள் இதயத்தை திருடிவிடும். படக் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார் தனுஷ்.
அவரது இந்த பாராட்டை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்களது கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா சுவாமிகளை பிரார்த்திக்கிறேன். நன்றி' என தெரிவித்திருக்கிறார்.