Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுத்த ஜப்பான் படக்குழு!

09 நவ, 2023 - 10:49 IST
எழுத்தின் அளவு:
'Japan':-Karthi-as-'Golden-Star'-sets-the-dance-floor-on-fire-with-Anu-Emmanuel,-'Touching-Touching'-video-song-out-now

கார்த்தி நடித்துள்ள 25வது படம் ஜப்பான். ராஜு முருகன் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டச்சிங் டச்சிங் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். அதோடு கார்த்தி இந்த பாடலை பின்னணி பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து இந்திராவதி சவுகான் என்பவரும் பாடியுள்ளார். அதோடு இந்த பாடல் வீடியோவில் இப்பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டத்தை இந்த பாடலுக்காகதான் கொடுத்தார்களா? இல்லை இந்த படத்தின் டைட்டில் கார்டிலும் கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது படம் திரைக்கு வரும்போது தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜிகர்தண்டா -2 ,ஜப்பான் படங்களுக்கு சிறப்பு காட்சி:தமிழக அரசு அனுமதிஜிகர்தண்டா -2 ,ஜப்பான் படங்களுக்கு ... இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 படத்திலும் நடித்து வரும் கமல்ஹாசன் இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)