Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ரஜினி 170' : புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

29 அக், 2023 - 04:37 IST
எழுத்தின் அளவு:
Thalaivar-170:-Rajinikanth,-Amitabh-Bachchan-wrap-up-Mumbai-schedule

'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. இப்படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.

இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடித்த காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் ரஜினி-அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லியோ வெற்றி விழாவுக்கும் வந்த சோதனை: அனுமதி கிடைப்பதில் சிக்கல்லியோ வெற்றி விழாவுக்கும் வந்த சோதனை: ... கார்த்தி சொன்ன திமிங்கலம் கதை: சுவாரஸ்யம் ஈர்க்கும் ‛ஜப்பான்' டிரைலர் கார்த்தி சொன்ன திமிங்கலம் கதை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)