ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துடன் தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங்கை ஆரம்பித்துவிட்டார் என்று படக்குழுவினர் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஷங்கரும் உடனிருந்தார். இது பற்றி தெலுங்கு மீடியாக்கள் தவறான செய்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். 'இந்தியன் 2' டப்பிங்கில் ஷங்கர் இருந்தால், 'கேம் சேஞ்சர்' படத்தை தற்போது யார் இயக்கி வருகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஷங்கர். “ஹைதராபாத்தில் நேற்று முதல் எங்களது 'கேம் சேஞ்சர்' படத்திற்காக உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அப்பா மறைந்ததை அடுத்து நேற்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த சூழலிலும் நேற்றிரவு படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வதந்தி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.




