Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்!

01 அக், 2023 - 03:07 IST
எழுத்தின் அளவு:
Karudan:-Vetrimaaran's-next-movie-with-Soori,-Unni-Mukundan-goes-on-the-floor

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி என இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளார் என்கிறார்கள். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷூடன் இணைந்து சீடன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தில் 1947 ஆகஸ்ட் 16 படத்தில் நாயகியாக நடித்த ரேவதி ஷர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்!நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு ... இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)