கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி |
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தற்போது கன்னடத்தில் நடித்து வரும் கோஸ்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவராஜ்குமாரின் முதல் பான் இந்தியா படமாக இது ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் ஜெயராம் முதன்முறையாக கன்னடத்தில் நுழைந்துள்ளார். இந்த படத்தை ஶ்ரீனி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். ஆனாலும் படத்தில் கிளைமாக்சில் அவரது என்ட்ரி மாஸாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. இதை தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் ஜெயிலர் படம் மூலமாக சிவராஜ்குமாருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் தானே சொந்த குரலில் இந்த படத்துக்காக டப்பிங் பேசுகிறார் சிவராஜ்குமார். மலையாளத்திலும், ஹிந்தியிலும் மட்டும் அவருக்கு பொருத்தமான குரலில் பேசும் நபரை வைத்து டப்பிங் செய்ய இருக்கிறார்களாம்.