முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா | மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு | சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடு | ரீ ரிலீசில் வசூல் சாதனை செய்த அஜித்தின் மங்காத்தா | தேவரா 2 படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது | ரூ.350 கோடி வசூல் கடந்த சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' | பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | ரீ ரிலீஸ் ஆகிறது சிம்புவின் 'சிலம்பாட்டம்' | ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? 'ஹாட்ஸ்பாட் 3' வருமா? இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் | போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் நடந்தது என்ன? : தங்கசங்கிலி பெற்ற மதுரை பரோட்டா சேகர் பேட்டி |

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திஷா பதானி, நட்டி எனும் நட்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பன்மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதை முடித்த பின்னர் சுதா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‛‛நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. எனது பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் மும்பையில் படிக்கின்றனர். அவர்களை பார்க்க அடிக்கடி சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன்'' என்றார்.




