ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி. ‛சில்ரன் ஆப் ஹெவன், முகம்மது : தி மெசஞ்சர் ஆப் காட், பியாண்ட் தி கிளவுட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இவர் பாலிவுட் சினிமா பற்றி கூறுகையில், ‛‛இந்தியாவில் திரைப்படம் உருவாக்க சிறந்த திறமையும், ஆற்றலும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள், கலாச்சாரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் பாலிவுட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை தான்.
இன்றைக்கு மக்கள் சமூகவலைதளங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இப்போது எடுப்பது போன்று இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே பாலிவுட் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுக்க வேண்டும். இப்படி சொல்வதால் நான் பாலிவுட்டிற்கு எதிரானவன் அல்ல. அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நிறைய திறமையான இளம் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.