சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திஷா பதானி, நட்டி எனும் நட்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பன்மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதை முடித்த பின்னர் சுதா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‛‛நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. எனது பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் மும்பையில் படிக்கின்றனர். அவர்களை பார்க்க அடிக்கடி சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன்'' என்றார்.