பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
இதயம், உழவன், காதலர் தினம், காதல் தேசம், காதல் வைரஸ் ஆகிய படங்களை இயக்கியவர் கதிர். கடைசியாக கடந்த 2015ல் இவர் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த படம் நான் லவ் ட்ராக் . அதன் பிறகு ஸ்ரீ காந்த், ஷாம் போன்ற நடிகர்களை வைத்து படங்களை தொடங்கினார் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படங்கள் கைவிடப்பட்டது. மேலும், இவரிடம் மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோர் உதவி இயக்குனராக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு கழித்து தமிழில் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார் கதிர். முதல் முறையாக இந்த படத்தில் ஹீரோவாகவும் கதிர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லவ் டுடே இவானா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.