பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்தவர் 'வீரா' படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு தமிழ்படம் 2, நான் சிரித்தால் படத்தில் நடித்தார் கடைசியாக 'ஸ்பை' தெலுங்கு படத்தில் நிகில் சித்தார்த் ஜோடியாக நடித்தார்.
தற்போது மம்முட்டியுடன் 'பஸூகா' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் மம்முட்டியுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:
நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு 'பஸூகா' படத்தின் மூலம் நனவாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர். ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது. அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.