சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
நடிகர் தனுஷ் கடந்த வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்தார்.
இதையடுத்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா,சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள். ஆனால், இது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே சென்னையில் உள்ள இ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை(ஜூலை 5) புதன்கிழமை பூஜையுடன் துவங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது .