மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா என்ற கன்னட படங்களிலும் 'ஹன்ட்' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும், பாவனா தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.