'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சரித்திர கால கதையில் தயாராகும் இப்படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியையும் வளர்த்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையான இவர் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.