சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

நடிகர் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 55 நாட்கள் கொண்ட மிக நீண்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊர்களில் கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. அதனால் இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர், இதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.




