என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை நிமிஷா சஜயன். கமர்ஷியல் படங்கள் பக்கம் போகாமல் யதார்த்த சினிமாவின் நாயகியாக கொண்டாடப்படுகிறவர். மாங்கல்யம் தந்துனானேனா, சோழா, நாயாட்டு, தி கிரேட் இண்டியன் கிச்சன், ஒன், மாலிக், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் உள்பட பல படங்களில் நடிப்பால் கவனம் ஈர்த்தவர்.
அவர் தமிழில் அறிமுகமாகும் படம் 'மிஷன் 1: அச்சம் என்பதில்லையே'. இந்த படத்தில் அவர் அருண் விஜய்யின் மனைவியாகவும் 6 வயது குழந்தைக்கு தாயாகவும் நடிக்கிறார். எமி ஜாக்சன் லண்டன் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். மலையாள படங்களில் நடிப்பின் மூலம் புகழ்பெற்ற நிமிஷா இந்த படத்தின் மூலம் தமிழில் வலுவான கால்பதிப்பாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.
எம். ராஜசேகர், எஸ்.சுவாதி தயாரித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஏ.எல்.விஜய்க்கும் இது முக்கியமான படமாகும்.