நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மிர்ச்சி சிவா நடித்துள்ள ‛‛சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'' படம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய சிவா, ‛‛இந்த படத்தின் கதை புதுமையாகவும், எனக்கு ஏற்ற வகையிலும் இருந்ததால் நடித்தேன். லாஜிக்கிற்கு அப்பாற்பட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் பதில் அளித்தார். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விக்கு, ‛‛என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினி மட்டுமே. அதேப்போன்று அகில உலக சூப்பர் ஸ்டார் நான் தான்'' என்றவர். எனக்கு யு சான்று கிடைக்கும் படங்களே போதும். நமது ரசிகர்கள் எல்லாம் பேமிலி ஆடியன்ஸ். அதனால் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தம் வசனம் கொண்ட அடல்ட் மாதிரியான படங்களில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்றார்.
கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும், இவரும் ஒரேமாதிரியாக இருப்பது போன்று மீம்ஸ் வருகிறதே என்ற கேள்விக்கு, ‛‛அவரைப்போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. என்னைப் போல் அவரால் நடனம் ஆட முடியாது'' என காமெடியாக பதில் அளித்தார்.