Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கியாரா அத்வானிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆர்சி- 15 படக்குழு!

14 பிப், 2023 - 05:32 IST
எழுத்தின் அளவு:
Team-RC15-and-SVC50-wishes-Sidharth-Malhotra-and-Kiara-Advani-a-very-Happy-Married-Life

இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ஆர்.சி-15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கியாரா அத்வானி. இவருக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த வாரத்தில் ராஜஸ்தானியில் உள்ள ஜெய்சல்மாரில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கியாரா அத்வானிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக, 'இது எங்களுக்கு இனிமையான ஆச்சரியம். அன்பை உணர்கிறேன். மிக்க நன்றி. உங்களிடம் நிறைய அன்பை இழந்துவிட்டேன் தோழர்களே' என்று பதிவிட்டுள்ளார் கியாரா அத்வானி.

இந்த நிலையில் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதையடுத்து ஆர்சி-15 படக்குழுவை சேர்ந்த, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம்சரண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோஹோத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பூக்களை அள்ளி தூவியபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், 'உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஒலியுடன் இருக்க வாழ்த்துகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுதா இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய்?சுதா இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய்? ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் நடிப்பு: தமன்னா மகிழ்ச்சி ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)