ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' |
நேற்று முன்தினம் சென்னையில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அட்லீ- பிரியாவை வாழ்த்திய விஜய், தனது சார்பில் பிரியாவுக்கு ஒரு அழகிய ஓவியத்தை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் ஏற்கனவே விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ள அட்லி, விஜய் நடிக்கும் 68வது படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் இயக்குவதாகவும், அந்த படத்திற்கான ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனால் தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வரும் அட்லி, அப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி திரைக்கு வந்ததும் விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்குவார் என்று தெரிகிறது.