பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி |

தமிழில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. அதோடு தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிங்கிள் பாடலுக்கு தமன்னா தான் நடனம் ஆடப்போகிறார். இந்த நிலையில் தமன்னா அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
அதில், ‛‛என்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கும் எல்லா பெண்களையும் போன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும் தற்போது நான் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க கூட எனக்கு போதுமான நேரமில்லை. அந்த வகையில் இப்போதைக்கு எனது கவனம் எல்லாம் சினிமா மீது மட்டும்தான் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது . அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக எந்த ஐடியாவும் இல்லை'' என்கிறார் தமன்னா.




