இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..! | பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? | நீளிரா: மற்றுமொரு இலங்கை படம் | உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ் | 'டிமான்ட்டி காலனி'யில் கொடூர வில்லனாக குரு சோமசுந்தரம் | சினிமாவை தவிர எல்லாமே எனக்கு இரண்டாம் பட்சம்தான்: கென் நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக்: சார்லி சாப்ளின் தோற்றத்தில் வலம் வந்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை புகழ்ந்து பாடிய சிவாஜி | 100 ஷோலேவுக்கு சமம் : துரந்தர் 2 படம் பார்த்த ராம்கோபால் வர்மா சிலாகிப்பு |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் படங்களில பிஸியாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். மீள முடியாத இந்த துயர சம்பவத்திலிருந்து மீனா இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். வித்யாசாகர் மறைந்த சமயத்தில் இருந்து இப்போது வரை மீனாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார் நடன இயக்குனர் கலா.
இந்நிலையில் கலா மாஸ்டர் தனது 18வது திருமணநாளை கொண்டாடினார். இதற்கு வரும்படி மீனாவை அழைத்துள்ளார். ஆனால் மீனாவோ தான் ஊரில் இல்லை என கூறிவிட்டார். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த கலாவிற்கு சர்ப்ரைஸாக மீனா என்ட்ரி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதுபற்றி கலா கூறுகையில், ‛‛மீனா ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னார். எங்களுடைய இந்த சிறப்பு நாளில் அவர் என்னுடன் இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால் திடீரென்று வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா'' என கூறியுள்ளார்.
அதோடு மீனாவை பார்த்த இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கிய போட்டோக்களையும், தனது திருமணநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் கலா பகிர்ந்துள்ளார்.




