இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் கமலின் புதிய படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இவர் கமலின் விஸ்வரூபம் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சீன் போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கின்றன.
இந்த படம் கமலின் ‛இந்தியன் 2' படம் முடிந்து தான் துவங்கும் என தெரிகிறது. இதனிடையே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்கலாம் என ஒரு பேட்டியில் மகேஷ் நாராயணன் கூறியிருக்கிறார். இது நடக்கும்பட்சத்தில் ‛விக்ரம்' படத்திற்கு பின் மீண்டும் கமல் உடன் பகத் பாசில் இணைவார் என தெரிகிறது.