Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிஜூமேனனுக்கு வில்லனாக மாறிய குரு சோமசுந்தரம்

22 ஜூன், 2022 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Guru-Somasundaram-became-the-villain-for-Biju-Menon

தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாது, மலையாள திரையுலகைச் சேர்ந்த படைப்பாளிகளின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்தவர் நடிகர் குரு சோமசுந்தரம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட படமாக வெளியான மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம் வில்லனாக, அதேசமயம் அவரும் ஒரு சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து தமிழைவிட மலையாளத்தில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிஜூமேனன் கதையின் நாயகனாக நடிக்கும் நாலாம் முறா (நான்காவது முறை) என்கிற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. 2013-ல் ஜெயராம் நடித்த லக்கி ஸ்டார் என்கிற படத்தை இயக்கிய தீபு அந்திக்காடு என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிலிம்பேர் விழாவில் நடனம் ; தகர்ந்துபோன வில்லன் நடிகர் லட்சியம்பிலிம்பேர் விழாவில் நடனம் ; ... அட்லாண்டிக் கடல் பயணத்தில் அஜித் அட்லாண்டிக் கடல் பயணத்தில் அஜித்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)