சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் |

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமணம் நாளை(ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் கடற்கரை ஓரம் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் படமாக்கி அதை ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதன் காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நேற்று திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மருதாணி நிகழ்ச்சி குறித்த தகவல் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.