‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்ட வீடியோக்கள் யு-டியூபில் வெளியாகும் போது படத்திற்குப் படம் புதிய சாதனைகளைப் படைக்கும். அந்த சாதனையில் விஜய், அஜித் படங்கள்தான் எப்போதுமே போட்டி போடும். மற்ற நடிகர்களின் வீடியோக்கள் அவர்களுக்குப் பிறகுதான்.
ரஜினிகாந்த் பட வீடியோக்கள் கூட விஜய், அஜித் படங்களின் சாதனையை நெருங்க முடியாத அளவில்தான் உள்ளது. ரஜினிகாந்த் பட டிரைலர்கள் இதுவரையிலும் 1 மில்லியன் லைக்குகளைத் தொட்டதில்லை. 'கபாலி' டீசர்தான் ரஜினி பட டீசர்களிலேயே முதன் முதலில் சாதனையை ஆரம்பித்து வைத்தது. இந்திய அளவில் அதிகப் பார்வைகைளப் பெற்ற டீசராக அந்த டீசர் வெளிவந்த போது சாதனையைப் படைத்தது.
அதன் பிறகு வெளிவந்த படங்களில் 'தர்பார்' டிரைலர் மட்டும் 7 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. ரஜினி பட டிரைலர்களில் அதிக பட்ச பார்வைகளைப் பெற்ற இதே டிரைலர்தான் 20 மில்லியன் பார்வைகளுடன் உள்ளது.
'தர்பார்' டிரைலர் லைக்குகளை தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வர உள்ள 'விக்ரம்' டிரைலர் முறியடித்துள்ளது. 'விக்ரம்' டிரைலருக்கு 1 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது. 16 மில்லியன் பார்வைகளையும் இது கடந்துள்ளது. விரைவில் 'தர்பார்' பார்வைகளான 20 மில்லியன் பார்வைகளையும் கடந்துவிடும் வாய்ப்புள்ளது.
ரஜினி பட டிரைலர் சாதனையை கமல் பட டிரைலர் முறியடிப்பது ரஜினி ரசிகர்களிடம் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.




