ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழில் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் நடித்த தமன்னாவுக்கு, அதன் பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லை. ஆனபோதிலும் தெலுங்கில் குருதண்ட சீதாகளம், எப்-3, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருபவர், மூன்று ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக எப்-3 என்ற படத்தில் ஹரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் தமன்னா. மேலும், இந்த கதாபாத்திரம் எப் -3 படத்தில் கதைக்கு திருப்புமுனை வாய்ந்த கதாபாத்திரம். மிக பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெங்கடேசுடன் நடித்துள்ள இளவட்ட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகும் என நினைக்கிறேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் தமன்னா. இதுவரை நான் நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு காமெடி நடிப்பை இந்த படத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த எப் 3 படம் மே 27ம் தேதி திரைக்கு வருகிறது.