'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை இயக்கினார் பார்த்திபன். அவர் ஒருவரே நடித்து அவரே இயக்கிய படம் என்கிற வகையில் அது புதுமையாக இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. இந்த நிலையில் அடுத்த முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தை முதல் நான் - லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற மே 1ம் தேதி சென்னை தீவு திடலில் பிரமாண்டமாக நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.