ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா. 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிகர்தண்டா படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போகிறாராம். பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.