பிரித்விராஜூக்கு வில்லனாக மலையாளத்தில் நுழைந்த கத்தி பட வில்லன் | ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி | நிவின்பாலிக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி கண்டனம் | 'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா லோகேஷ் கனகராஜ் ? | கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய விஜய் : பொங்கல் விழா கொண்டாடாமல் போனது ஏன்? | 2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம் | 'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை | சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் |

வினோத் இயக்கத்தில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வலிமை' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். இரு வேறு விதமான விமர்சனங்கள் படத்திற்கு வெளிவந்தன. அஜித் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதே சமயம், விமர்சகர்கள் சுமாரான படம் என்றும், அஜித்தின் எதிர் தரப்பினர் மிகச் சுமாரான படம் என்றும் விமர்சித்தார்கள்.
இருப்பினும் படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளிவந்தன. பல ஏரியாக்களில் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தங்கள் மகிழ்ச்சியை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளனர். 2022ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தனியொரு படமாக வெளிவந்த இப்படத்திற்கு இரண்டாவது வாரத்திலும் பெரிய போட்டி எதுவுமில்லை. நேற்று 'ஹே சினாமிகா' படம் மட்டுமே வெளிவந்துள்ளது. அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதிதான் 'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளிவருகின்றன. அதற்குள் இந்தப் படம் முடிந்தவரையிலும் வசூலித்துவிடும் என்கிறார்கள்.