Advertisement

சிறப்புச்செய்திகள்

கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய விஜய் : பொங்கல் விழா கொண்டாடாமல் போனது ஏன்?

17 ஜன, 2026 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Vijay-celebrated-Christmas-Why-didnt-he-celebrate-Pongal
Advertisement

தமிழக அரசியல் விஜய் வந்த பின் ஒரு சலசலப்பு ஏற்பட்டது உண்மைதான். அதே சமயம் அவருடைய சில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சில தலைவர்களுடைய பிறந்தநாளின் போது கூட பனையூர் அலுவலகத்தில் அந்தத் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து ஒரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சில வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதுடன் நிறுத்தி விடுகிறார்.

கடந்த வருடம் அவர் கரூரில் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி அகால மரணமடைந்தனர். அதனால், போன வருடம் அதன்பின் வந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் தரப்பில் முடிவெடுத்தார்கள். தீபாவளியை முன்னிட்டு விஜய் எந்த வித வாழ்த்து செய்தியும் தெரிவிக்கவில்லை.

ஆனால், அதற்கடுத்த இரண்டு மாதங்களில் வந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மட்டும் ஒரு பிரம்மாண்டமான விழாவாக மகாபலிபுரத்தில் கொண்டாடினார். அதில் கிறிஸ்துவ மத போதகர்கள் உள்ளிட்ட பல கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

அதே சமயம், தற்போதைய கொண்டாட்டமான தமிழர்கள் பொங்கல் விழாவை அவர் கொண்டாடுவதைத் தவிர்த்துள்ளார். கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய விஜய், பொங்கல் விழாவைக் கொண்டாடாமல் போனது ஏன் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த திங்களன்று கரூர் பலி குறித்த சிபிஐ விசாரணைக்காக டில்லிக்குச் சென்றார். பொங்கல் கொண்டாட வேண்டும் என்ற காரணத்தை சொல்லி மீண்டும் ஆஜராவதை பொங்கலுக்குப் பிறகு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாகச் சொன்னார்கள்.

இருந்தாலும் இந்த இரண்டு நாட்களில் அவர் வாழ்த்துகளைச் சொன்னதைத் தவிர பொங்கல் கொண்டாடியதாக எந்த ஒரு புகைப்படமும், வீடியோவும் வெளியாகவில்லை. சிபிஐ விசாரணை காரணமாக, அவர் வருத்தத்தில் இருப்பதால் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம்2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் ... 'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா லோகேஷ் கனகராஜ் ? 'எல்சியு' : மொத்தமாக மூடிவிட்டாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

baala - coimbatore,இந்தியா
19 ஜன, 2026 - 11:01 Report Abuse
baala அருமையான கேள்வி. நாட்டை முன்னேற்றுபவர்.
Rate this:
Rock -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2026 - 01:01 Report Abuse
Rock Simple. Avan oru Christian
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
20 ஜன, 2026 - 02:01Report Abuse
angbu ganeshமுதல்வர் ஆனா எல்லா மதத்தினரையும் மதிக்கணும் ஸ்டாலின் மாதிரி வெறுப்பேத்தினா இவரும் ஸ்டாலினும் ஒண்ணுதான், விஜய் ஸ்டாலின் கிட்ட தமிழ் நாட்டை ஒப்படைச்சா நாடு சுடுகாடுதான் இல்ல மெஷினரி நாடாய்டும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap