ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜெஹோவா பிலிம் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் தயாரித்துள்ள படம் பொல்லாப்பு. தேவன் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகியாக ரித்திகா, ஹர்ஷ்தா பட்டேல் நடித்துள்ளனர். மற்றும் சம்பத்ராம், ஆதேஷ் பாலா, பவர் ஸ்டார், கில்மா கிரி, சில்மிசம் சிவா, ராஜன், கவுண்டமணி தினேஷ், தாவுத், சத்யன், நவீந்தர், அன்பழகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.திருப்பதி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜான்சன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி தேவன் கூறியதாவது: நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை பற்றிய படம் இது. அவர் சந்திக்கும் குற்றவாளிகளை தண்டிக்க நினைக்காமல், திருத்த நினைக்கும் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை, அவரது கடமையை செய்யவிடாமல் எதிர்க்கும் சமூக விரோதிகளை எப்படி கையாள்கிறார். எதிரிகளால் தனது குடும்பத்தை இழந்தும் எப்படி இந்த சமூகத்திற்கு சிறப்பாக பணியாற்றி தர்மத்தை நிலைநாட்டினார் என்பது படத்தின் திரைக்கதை.
படப்பிடிப்பு சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சனகிரி மலை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.என்றார்