தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

டான், அயலான் படங்களைத் தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ள சூரியும் சிவகார்த்திகேயனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், என் அன்புத் தம்பி செல்லத்தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் வீட்டுக்கு கேக்குடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந் திருக்கிறார். அந்த புகைப்படங்களையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.