
நடிகர் ஆர்யாவின் ‛கேப்டன் படப்பிடிப்பு நிறைவு
இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
"கேப்டன்" படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார், யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!