37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ள படம் வலிமை. அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பல அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் சாகசங்களையும் செய்துள்ளார் அஜித். அதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படம் இந்தியா மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் வெளியாக உள்ள நிலையில் ஜப்பானில் வலிமை படத்திற்காக முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறதாம்.