துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்து வெளிவந்த 'நண்பன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா. அதன்பிறகு தமிழ்ப்படங்களில் அவர் நடிக்கவேயில்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
எப்போதுமே மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பவர் இலியானா. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த வாரம் கூட பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூட ஒல்லியாகத்தான் தெரிகிறார். ஆனால், நேற்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கொஞ்சம் குண்டாக மாறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய புதிய தோற்றம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில், “உங்களை ஒல்லியாக, அதிக நிறத்துடன்…etc..etc… காட்டக் கூடிய மொபைல் அப்ளிகேஷன்களுக்கு அடிமையாவது மிகவும் எளிது. அது எல்லாவற்றையும் நான் தற்போது டெலிட் செய்துவிட்டேன். அவற்றிற்குப் பதிலாக இப்போது இதைத் தேர்வு செய்துள்ளேன். இதுதான் நான், என்னுடைய ஒவ்வொரு அங்குலத்தையும், ஒவ்வொரு வளைவையும் பற்றி பெருமைப்படுகிறேன்,” என வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார்.
பலரும் இப்படி மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தித்தான் தங்களது புகைப்படங்களை அழகாகப் பதிவிடுகிறார்கள் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறார் இலியானா.