இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் சூரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் "உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற மோசடி பிரச்னையில் சிக்க கூடாது. கோடி கணக்கில் மோசடி நடத்திருப்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். அதனை துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவர் கண்காணிக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.