லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ஆர்ஆர்ஆர்' படம் இந்த வாரம் ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பட வெளியீட்டை படக்குழு தள்ளி வைப்பதாக அறிவித்தது.
'ஆர்ஆர்ஆர்' படம் திட்டமிட்டபடி வெளியிட முடியாத காரணத்தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். பிரிமீயர் காட்சிகள், முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவும் அங்கு நடந்தது. அது போல் இந்தியாவிலும் முன்பதிவு நடந்தது. இந்த முன்பதிவுகளின் காரணமாக சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு வழிவிட்டு சில படங்களை அதன் தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்தார்கள். அடுத்து இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கெனவே அந்த மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படங்களுக்கு இதனால் பாதிப்பு வரலாம்.
எல்லாவற்றிற்கும் கொரோனா தான் காரணம் என்றாலும் இந்த வார வெளியீட்டிற்காக படக்குழுவினர் பல ஊர்களில் சுற்றி வந்து பிரமோஷன் செய்தது வீணாகப் போய்விட்டதே என திரையுலகத்திலும் பலர் வருந்துகிறார்கள். அதற்கான செலவுகள், விளம்பரங்கள் என 20 கோடி வரை செலவு செய்ததாக தகவல் வெளியானது. அடுத்த வெளியீட்டுத் தேதியின் போது இது போல மீண்டும் பிரமோஷன் செய்தால் படத்தின் பட்ஜெட் இன்னும் கூடுதலாகும். இன்னும் மூன்று மாதங்கள் காத்திருந்தால் 400 கோடி ரூபாய் பட்ஜெட் படத்திற்கான வட்டியே எத்தனை கோடி வரும்.
இதன் காரணமாக படத்திற்குப் பின்னடைவா என்ற கேள்வி எழுந்தாலும், 'ஆர்ஆர்ஆர்' அதற்குரிய தனித் தன்மையை இழக்காது என்றே டோலிவுட்டினர் ஆறுதல் சொல்கிறார்கள்.