முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் , பிரபு இணைந்து தயாரித்துள்ள படம் க். பாபு தமிழ் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் பாபு தமிழ் கூறியதாவது: ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் பேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது. உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் பேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. என்றார்.