5 காட்சிகளை ஆரம்பித்து வைத்த முதல் படமாக 'பிளாஸ்ட்' | ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் |

நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்தார் இந்தநிலையில், பிரித்விராஜ், நயன்தாராவை இணைத்து கோல்டு என்கிற படத்தை இயக்கி முடித்துள்ள அல்போன்ஸ் புத்ரன், தற்போது அந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த படம் நேரமும் பிரேமமும் போல இல்லை. இது வேற மாதிரி படம்.. நிறைய நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு மூன்று பாடல்கள், நிறைய நகைச்சுவைகள் கொண்ட எனது மூன்றாவது திரைப்படம். வழக்கம் போல ஒரு எச்சரிக்கை! போரையும் பாசத்தையும் எதிர்பார்த்து யாரும் அந்த பக்கம் வரக்கூடாது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.




