Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம்

10 மே, 2026 - 01:31 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-is-my-sister...-why-What-Srileela-said-in-Chennai
Advertisement


தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்தார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்க தனுஷ் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். சென்னை வந்திருந்தவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: நான் டாக்டருக்கு படித்துவிட்டு நடிக்க வந்தேன். மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய ஆசை இருக்கிறது. இப்போது டாக்டர் படிப்பில் இன்டர்ன் ஆக இருக்கிறேன். வருங்காலத்தில் அப்படி மக்களுக்கு சேவை செய்யலாம். நான் சினிமாவில், நடிப்பில், வாழ்க்கையில் ஜெயிக்க என் அம்மாதான் காரணம். அவர்தான் என் வலிமை. என் ஒவ்வொரு அடி முன்னேற்றத்திலும் அவர் இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, எல்லா மகன், மகள்களுக்கும் அம்மா முக்கியம்தானே.

எல்லாருடைய வாழ்க்கையிலும் வெற்றி தோல்வியும் மாறி, மாறி வரும். அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தோல்வி அடைந்தால் ஒரு மணி நேரம் அழுவேன். அடுத்து முகத்தை பார்ப்பேன். அடுத்த வேலைக்கு சென்றுவிடுவேன். எல்லா மனிதர்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு சந்தோஷம், வலி இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். இப்போது இந்தி படங்களில் நடிக்கிறேன். இப்ப, தென்னிந்தியா, வட இந்தியா என்ற நிலை இல்லை. நல்ல சினிமாவில் நான் இருக்க நினைக்கிறேன்.

என்னை சிலர் லேடி சூப்பர்ஸ்டார் என்கிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். என் பேவரைட் நடிகை நயன்தாரா அக்கா. அவர்தான் அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர். அவர் என் ரோல்மாடல். சென்னை பசங்களை ரொம்ப பிடிக்கும். நயன்தாரா மாதிரி சென்னையில் திருமணம் செய்வேனா என தெரியவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. சென்னை தோசை ரொம்ப பிடிக்கும். நான் விமானப்பயணம் அடிக்கடி செய்வேன். இப்போதும் ஒவ்வொரு முறை அது தரை இறங்கும்போது பயமாக இருக்கும்.

சின்ன வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்யும்போது அனைவருக்காக பிரார்த்தனை செய்யணும். விமானம் தரையிறங்கிய பின் பைலட், மற்ற குழுவுக்கு கை தட்டி நன்றி சொல்ல வேண்டும் என்று என் அம்மா சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதை இப்போதும் செய்கிறேன். சில முறை ஒட்டுமொத்த விமானத்தில் நான் மட்டுமே கைதட்டியிருக்கிறேன். அந்த சவுண்டு அவர்களை சென்றடையும், அது அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய்சினிமா பிரபலங்களின் வாழ்த்து ... தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap