'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் | பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இலங்கை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானார். அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிக்க ஆரம்பித்த புதிதிலேயே மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக வலம் வந்த அவர், தற்போது சூப்பராக பாடி ட்ரான்ஸ்பர்மேஷன் செய்துள்ளார்.
பிக்பாஸில் பப்ளியாக இருந்த லாஸ்லியா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார், அதற்கேற்றார் போல் அவரது முகவட்டும் மாறிவிட்டது. சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்க்கும் சிலர், லாஸ்லியா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பாலிஷாகிவிட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் மெருகேறிய அழகுடன் வலம் வரும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.




