அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி 7-ம் தேதி ஆர்ஆர்ஆர்படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று நவம்பர் 1ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் அதிரடியான பாகுபலிக்கு இணையான பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படம் குறித்த பல அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, ஆர்ஆர்ஆர் படம் பாகுபலிக்கு இணையான ராஜமவுலியின் இன்னொரு பிரமாண்ட படம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.




