யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் |

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என கைவசம் மொழிக்கு ஒன்றாக படங்களை வைத்திருக்கிறார் துல்கர் சல்மான். தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி என்பவர் டைரக்சனில் ராணுவ வீரராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தனது நண்பரும் மலையாள சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் துல்கர் சல்மான். துல்கருடன் இணைந்து சார்லி, கலி, என 5 படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




